பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்.,மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவுசெய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.ஆன்-லைனில் பதிவு செய்யப்படும் மாணவர்களின் விபரங்களான, பெயர், ஜாதி, பிறந்த தேதி, போட்டோ ஆகியவை தவறு இல்லாமல் பதிவு செய்ய தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களின் விபரங்களை தவறுகள் இல்லாமல் பெற்று, ஆன்- லைனில் செப்., 30 க்குள் பதிவு செய்ய வேண்டும்.இந்த விபரங்கள் பெறும் போது மாணவர்களின் தொடர்புக்காக மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு ஆன்- லைனில் பதிவு செய்யப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில், தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்களில் மாணவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள இந்த ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி