திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2013

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து.

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து பெறப்படும் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டங்கள், முறையான படிப்புகளுக்கு சமமாக கருதி  தமிழக அரசின் வேலைவாய்ப்பு வழங்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அனுமதித்தது. அதன் அடிப்படையில் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை கடந்த 2000ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.இந்நிலையில் அடிப்படை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் பொதுப்பணிகளில் நியமனம் செய்ய இயலாது என பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை கடந்த 2010ல் புதிதாக அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணை:இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றால் பொதுப்பணிக்கு கல்வித்தகுதியாக கருத இயலாது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் இளங்கலை முடிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் முதுகலைப் பட்டம் முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய சலுகைக்கான பழைய அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி