தேர்வு சுமூகமாகவும், எந்தவிதப் பிரச்னையும் இன்றி நடைபெற பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட பொறுப்பாளர்கள் விவரம் (மாவட்டம், அதிகாரி):
1. விழுப்புரம் - இயக்குநர் தங்கமாரி
2. கடலூர் - இணை இயக்குநர் உமா
3. காஞ்சிபுரம் - இயக்குநர் இளங்கோவன்
4. திருவள்ளூர் - இணை இயக்குநர் உஷாராணி
5. சென்னை - இயக்குநர் அறிவொளி
உள்பட 31 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்..
திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஹால் டிக்கெட்டுகள் திருத்தப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டுகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.முதல் தாள் தேர்வுக்கு 48 ஹால் டிக்கெட்டுகளும், இரண்டாம் தாள் தேர்வுக்கு 834 ஹால் டிக்கெட்டுகளும் திருத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்களுக்கு வெவ்வேறு ஊரில் தேர்வு மையங்கள் போன்ற குறைபாடுகள் ஹால் டிக்கெட்டில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குப் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாயின. இதையடுத்து, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி