தமிழக பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள, "செஸ் கிளப்' நிதியின்றிதிணறுவதால், ஆக.,23ம் தேதி, மாவட்டம்தோறும், நடைபெற உள்ள செஸ் போட்டியில், மாணவர்களை பங்கேற்க வைக்க, விளையாட்டு அலுவலர்கள் தயக்கத்தில் உள்ளனர். மாவட்டம்தோறும், அரசு பள்ளிகளில், செஸ் கிளப் துவங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது;ஒரு பள்ளியில், சராசரியாக, 1000 மாணவர்கள் உள்ள நிலையில், செஸ் போர்டு வாங்க, 2011-12ல், 900 ரூபாய் வழங்கப்பட்டது. இதில், ஆறு அல்லது ஏழு போர்டுகள் மட்டுமே வாங்கப்பட்டதால், அனைவருக்கும் கற்றுத்தர முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, உடனடியாக, அனைத்து மாவட்டங்களிலும்,வட்டார அளவில் செஸ் போட்டி நடத்த வேண்டும். மாவட்ட அளவில், ஆக., 23ம்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என,உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், வட்டார அளவில், போட்டிக்கு செல்லவே நிதியின்றி, பங்கேற்க முடியாத நிலையில், போதிய பயிற்சியின்றி, பெயரளவில் மாவட்ட விளையாட்டு போட்டிக்கு சிலரை மட்டும் அழைத்து செல்ல வேண்டி உள்ளது என, உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி