நேர்முகத்தேர்வுடன் கூடிய 1,059 சார்நிலை பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது:– மெயின் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அடுத்த வாரம் அறிவிப்பு அனைத்து தாள்களும்பொது அறிவு சம்பந்தப்பட்டவை. மெயின் தேர்வு முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். அரசு பணிகளில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதாஆணையிட்டுள்ளார். அதன் பேரில் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.குரூப்–2 தேர்வை பொருத்தவரையில், தற்போது நேர்காணல் பதவிகள் கொண்ட தேர்வு, நேர்காணல் அல்லாத பதவிகளை உள்ளடக்கிய தேர்வு என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.அந்த வகையில் நேர்காணல் பதவிகள் கொண்ட (நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சார்–பதிவாளர்,இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வருவாய் உதவியாளர் போன்றவை) குரூப்–2 தேர்வின் கீழ் 1,059 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.ஆன்லைன் தேர்வு முடிவு அதேபோல், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு இதுவரை 757 காலி இடங்கள் வந்து இருக்கின்றன. இந்த தேர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும். இந்து சமய அறநிலை ஆட்சித்துறை உதவி கமிஷனர், நிர்வாக அதிகாரி(கிரேடு–1) ஆகிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.
Aug 17, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி