ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி பள்ளிகளில் ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் கூறினார்.ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த க.ஸ்ரீதேவி, பள்ளி கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சென்னை கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த அய்யண்ணன், ஈரோடு மாவட்ட முதன்மை கல்விஅலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர். ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராகவும், தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதால், இங்குள்ள பள்ளிகள், மாணவ, மாணவிகள் பற்றி நன்கு தெரியும். 2011-12-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், 2012-13-ம் கல்வி ஆண்டில் 3-வது இடத்தை பெற்றது.வரும் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற முயற்சி எடுப்பேன். அனைத்து தலைமை ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இது சாத்தியமாகும்.பள்ளிகளில் சிறந்த முறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் வைத்திருக்கிறேன். மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக மலைப்பகுதியான அந்தியூர், தாளவாடி, பர்கூர், கடம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதா என்பதை அறிந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து உரிய ஆசிரியர்களை ஒரு வாரத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.புதியதாக பொறுப்பேற்றுள்ள முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனுக்கு அலுவலக ஊழியர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி