தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது. மொத்தம் 677 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 937 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணியில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் என 29 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.இந்தத் தேர்வுக்காக சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வர்களில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 897 ஆகும். ஆண்களின் எண்ணிக்கை 65,040. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகள் சனி (ஆக.17), ஞாயிறு (ஆக.18) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளில் தேர்ச்சி பெற வேண்டும். சென்னையில் 27 தேர்வு மையங்களில் 9 ஆயிரம் பேர்இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் ஆயிரம் பேர் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி