அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2013

அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம்.

தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழக அரசு, கடந்த சட்ட மன்ற கூட்ட தொடரில், 50 அரசு நடுநிலை பள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தது. நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், இதுகுறித்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை.இனிமேல், உயர்நிலை பள்ளியாக மாற்றி அறிவித்தாலும், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நியமித்தல், அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் மீண்டும் அழைத்து வருதல் என்பது நடக்காத காரியங்கள். அரசின் அறிவிப்பு, வெறும் கண்துடைப்பானதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆனால், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக உயர்த்தப்படும் என, அரசு அறிவித்தது மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி