போலி சான்­றிதழ் மாந­க­ராட்சி ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரி­சீ­லனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2013

போலி சான்­றிதழ் மாந­க­ராட்சி ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரி­சீ­லனை.

போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மாந­கராட்சி இடை­நிலை ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்­பட உள்­ளனர். இதற்­கான நட­வ­டிக்கையில் மாந­க­ராட்சி தீவி­ர­மாக களம் இறங்­கி­யுள்­ளது.சென்னை மாந­க­ராட்சி இடை­நிலை ஆசி­ரி­யர்கள் பலர், போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தகவல் வெளி­யா­னது. இதுகுறித்து, மாந­க­ராட்சி விஜிலென்ஸ் அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்தி வந்­தனர். இந்த சம்­பவம் குறித்து, ‘தின­மலர்' நாளிதழ் விரி­வான செய்தி வெளி­யா­னது.இதை­ய­டுத்து, சர்ச்­சையில் சிக்­கிய போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்­களை பணி நீக்கம் செய்ய மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.சான்­றிதழ் போலி என உறுதி செய்­யப்­பட்­டுள்ள, 10 பேரை விரைவில் பணி நீக்கம் செய்­யவும், இந்த சர்ச்சை பட்­டி­யலில் உள்ள, 126 பேர் மீதான விசா­ர­ணையை தீவிரப்­ப­டுத்­தவும் முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இதில், பல ஆசி­ரி­யர்கள் விசா­ர­ணைக்கு ஒத்துழைக்க மறுப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனால் அவர்கள் மீது சந்­தேகம் வலுத்­துள்­ளது. விசா­ர­ணைக்கு வர மறுக்கும் ஆசி­ரி­யர்கள் மீதும் கடு­மை­யான நட­வடிக்கை எடுக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி