இரண்டாவது கட்டமாக "ஹால் டிக்கெட்' வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2013

இரண்டாவது கட்டமாக "ஹால் டிக்கெட்' வெளியீடு.

குரூப்-4 தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' பெறாதவர்களுக்கு, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நேற்று, "ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. வரும், 25ம் தேதி, குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதை, 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்'கள், கடந்த, 14ம் தேதி, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.தேர்வுக்கு, முறையாக விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை, 19ம் தேதிக்குள், தேர்வாணைய, "இ-மெயிலுக்கு' அனுப்பும்படி, தேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், நேற்று, "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டன. "இ-மெயில்' அனுப்பியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காத தேர்வர்கள் இருந்தால், அவர்கள், உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும், தேர்வாணைய அலுவலரை, 23, 24 தேதிகளில் அணுகலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி