"நீட்" தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சீராய்வு மனு: ஆசாத். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2013

"நீட்" தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சீராய்வு மனு: ஆசாத்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சீராய்வு மனுவை,மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்யும்" என, ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கும், மருத்துவபட்ட மேற்படிப்புகளுக்கும், நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூலை மாதம், 18ம் தேதி, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், "நீட்&' தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, மூன்று நீதிபதிகளைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. "நீட்" தேர்வை, இரு நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், ஒரு நீதிபதி, ஆதரவாக தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப் போவதாக, மத்திய அரசு முன்னரே தெரிவித்திருந்தது.தீர்ப்பை எதிர்த்து, பல தரப்பிலும், மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசும் விரைவில் முறையீடு செய்யப் போவதாக நேற்று தெரிவித்தது. ராஜ்யசபாவில் நேற்று, கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் இதுகுறித்து கூறுகையில்,"தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு, விரைவில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி