23ம் தேதி பிளஸ் 2 தனி தேர்வு : இன்று முதல் "ஹால் டிக்கெட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2013

23ம் தேதி பிளஸ் 2 தனி தேர்வு : இன்று முதல் "ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். தொடர்ந்து, அக்., 5ம்தேதி வரை
, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தனிதேர்வும், 23ம் தேதி துவங்குகிறது. ஆனால், 30ம் தேதியுடன் முடிகிறது. 170 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 46 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வர், இன்று முதல், 23ம் தேதி வரை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து,"ஹால் டிக்கெட்'களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்தது.இதேபோல், 10ம் வகுப்பு தனி தேர்வர்களும், தங்களது,"ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்யலாம். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், 21, 22ம் தேதிகளில், ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி