அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ரூ 7.11 கோடி செலவில் முன்பருவ கல்வியை போதிப்பதற்கு -முதல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2013

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ரூ 7.11 கோடி செலவில் முன்பருவ கல்வியை போதிப்பதற்கு -முதல்வர் உத்தரவு.

அங்கன்வாடி மையங் களில் பயன்பெறும் குழந்தை கள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக,
முன்பருவக் கல்வி போதனை நல்ல தரமுள்ள வகையில் அளிக் கப்படவேண்டும்.  இதனைக் கருத்தில் கொண்டு பல வண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொருஅங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில்  பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவகல்வியை போதிப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இப்பணி முதற்கட்ட மாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்.  அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தை கள், வளர் இளம்  பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தை களுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார்.  இதற்காக 7 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார். தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி