டி.ஆர்.பி., வினாத்தாட்களில் எழுத்து பிழைக்கு மறுதேர்வு அவசியமில்லை: பட்டதாரிகள் வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2013

டி.ஆர்.பி., வினாத்தாட்களில் எழுத்து பிழைக்கு மறுதேர்வு அவசியமில்லை: பட்டதாரிகள் வேண்டுகோள்.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில், எழுத்து பிழைக்காக, மறு தேர்வு நடத்துவதை தவிர்த்து, முடிவை வெளியிட,
டி.ஆர்.பி., முன்வர வேண்டும்" என முதுகலை பட்டதாரிகள் கூறினர்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை தமிழ் ஆசிரியர் காலிபணிகளுக்கு, ஜூலை 21ல் நடந்த போட்டி தேர்வில் 1.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவு வெளியாகவில்லை. இந்நிலையில், "பி" வரிசை வினாத்தாளில், அச்சுப்பிழையால், முடிவைவெளியிடுவதில், டி.ஆர்.பி., சிக்கலை சந்தித்து வருகிறது.எனவே, எழுத்துபிழையால், விடை அளிப்பதில், எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. விடைக்கான பொருள் புரியும் படிதான், எழுத்து பிழைகள் இருந்தன. இதனால், அர்த்தம் மாறவில்லை. எனவே, மறுதேர்வு திட்டத்தை கைவிட்டு, எழுத்து பிழை உள்ள வினாக்களுக்கு சரியான விடை எழுதியோருக்கு, விடைதாள்களை சரிசெய்து, முடிவை வெளியிடவேண்டும்.முதுகலை பட்டதாரிகள் கூறுகையில், "பி" வரிசை வினாத்தாளில்,"ங்" வரவேண்டிய இடத்தில், "து" வந்துள்ளது. எழுத்து மாற்றத்தால், எந்தவகையான பொருள் மாற்றங்கள் வினா அல்லது விடையில் ஏற்படவில்லை. பாடநூல்கள், போட்டி தேர்வுகளில் இது போன்ற சிறு எழுத்து பிழைகளை சரிசெய்யும் திறன், முதுகலை தமிழாசிரியருக்கு அடிப்படை தகுதியாக உண்டு.எனவே, எழுத்து மாற்றங்களை பிழைகளாக கருதக்கூடாது. ஒரு வினா அல்லது விடையில் இருக்கும் பல தொடர்களில் ஏதேனும் ஒரு சொல்லில் மட்டும் காணப்படும் எழுத்து மாற்றத்தை வைத்து, ஒட்டு மொத்தமாக தவறு இருப்பதாக கருதக்கூடாது. எனவே, எழுத்து மாற்ற பிழைகளை சரிசெய்து, தேர்வு முடிவை டி.ஆர்.பி.,வெளியிடவேண்டும்," என்றனர்.

4 comments:

  1. this is correct. because this is PG level competitive exam not 5th standard exam. If 5th std students were not easy to understand the printing mistake questions but now exam is only for msc., bed level teachers. so this is one of the way of get bonus marks without effort (or) cross way....... in this court case affected many tet and PG trb candidates lifes.. so god please help them...

    ReplyDelete
  2. sssssssssssss.that is right.m.a b.ed trs are able 2 understand d questions even d questions had printing mistakes.

    ReplyDelete
  3. திறமையில்லாதவர்களா நீங்கள் ? வழக்கு தொடுத்த

    ReplyDelete
  4. my qus `B` patten i understand all qus. please publish select list. vandam reexam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி