பேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2013

பேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

கல்லூரி உதவிப் பேராசிரியர் நேர்முகத்தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் தவறு நடக்காமல் இருக்க நேர்முகத்தேர்வு காட்சியை வீடியோவில் பதிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
1,093 காலி இடங்கள்

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்கள் போல் தகுதித்தேர்வோ, போட்டித்தேர்வோ இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறையில் உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.அதன்படி, பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் ஏழரை மதிப்பெண் வீதம் 15 மதிப்பெண்ணும், பி.எச்டி.முடித்திருந்தால் 9 மதிப்பெண்ணும், ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சியுடன் எம்.பில். பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்ணும், எம்.பில். இல்லாமல் ஸ்லெட், நெட் தேர்ச்சி இருந்தால் 5 மதிப்பெண்ணும், நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணிஅனுபவ சான்று தீவிர ஆய்வு
தேர்வுமுறைக்கான மொத்த மதிப்பெண் 34 ஆகும். தேர்வில் பணி அனுபவத்துக்கும், நேர்முகத் தேர்வுக்கும்தான் அதிக மதிப்பெண் உள்ளது. பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண் ஒதுக்கப்பட்டிருப்பதால் அதற்காக சமர்ப்பிக்கப்படும் சான்று தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர் குறிப்பிட்டகல்லூரியிலோ அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகத்திலோ இத்தனை காலம் பணியாற்றி வந்தாரா? சான்றிதழ் உரிய வகையில் பெறப்பட்டு கல்லூரிகல்வி மண்டல இணை இயக்குனர் அல்லது பல்கலைக்கழகப் பதிவாளரிடம் சான்றொப்பம் வாங்கப்பட்டு இருக்கி றதா? என்பதை ரகசியமாக ஆய்வு செய்திடவும் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
நேர்முகத்தேர்வு வீடியோவில் பதிவு
எல்லாவற்றுக்கும் மேலாக, நேர்முகத்தேர்வை இன்னும் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நேர்முகத்தேர்வில், மதிப்பெண் வழங்குவதில் தவறு நடக்காமல் இருக்க நேர்முகத்தேர்வு முழுவதும் ஆடியோவுடன் வீடியோவில் பதிவு செய்யப்படும்.இதன்மூலம் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வில் எவ்வாறு பதில் அளித்துள்ளார்? அதற்கேற்ப அவருக்கு உரிய மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கிறதா அல்லது பாரபட்சமாக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை எளிதாக கண்டறிய முடியும்.டி.என்.பி.எஸ்.சி.யைப் போலவீடியோவில் பதிவுசெய்யப்ப டுகிறது என்ற எச்சரிக்கை உணர்வு இருப்பதால் நேர்முகத்தேர்வு நியாயமாக நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி. நேர்முகக்தேர்வு வீடியோவில் பதிவுசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. NET/SET/SLET ku mark low and experiance & interview has high mark .........please conduct direct exam

    ReplyDelete
  2. NET/SET/SLET ku mark low and experiance & interview has high mark .........please conduct direct exam

    ReplyDelete
  3. why trb announced low marks for Net and set

    ReplyDelete
  4. TEACHERS RECRUITMENT BOARD, FOR THE SELECTION OF ASSISTANT PROFESSORS IN ARTS ANS SCIENCE COLLEGES, GIVES HIGH MARKS AFTER EXPERIENCE TO PH D HOLDERS. BUT NOW THE CONDITION HAS CHANGED AS PH D IS AWARDED NOT IN A GENUINE WAY. THIS IS KNOWN TO ALL. SO WHY CAN'T TRB GIVE MAXIMUM MARKS TO THOSE WHO CLEARED NET AND SET EXAMS.THE NET AND SET HOLDERS KNOW THE DIFFICULTY TO GET A PASS. ONLY BY BEING THOROUGH IN THE SUBJECT YOU CAN GET A PASS IN THESE COMPETITIVE EXAMS.SO IFAMMA OUR CM, THE ONLY HOPE AND LIGHT OF US ALL, TAKES STEPS REGARDING THIS WE CAN SHINE LIKE BRIGHT STARS AS A REWARD OF OUR HARD WORK.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி