''தாய்'' திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2013

''தாய்'' திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உத்தரவு.

தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு: தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (தாய்) மூலம் அனைத்து கிராமங்களிலும்தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக குடிநீர் தேவைக்கான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.
மேலும் கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் பட்டியலிட்டு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகி பெற வேண்டும் என முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை மாதம் தவறாமல் நடத்த வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மாவட்ட அளவில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தி பள்ளி மேம்பாட்டுக்கு டிஇஓக்கள் முனைப்பு காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி