ஆதார் அட்டைபெறுவது கட்டாயமல்ல:மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2013

ஆதார் அட்டைபெறுவது கட்டாயமல்ல:மத்திய அரசு

ஆதார் அட்டை பெறுவது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சம்பளம், வருங்கால
வைப்பு நிதி பட்டுவாடா, திருமணம், சொத்து பதிவு செய்தல் போன்றவற்றிற்கு கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என சில மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ் சவுகான், எஸ்.ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது பொதுநல வழக்கு தொடர்ந்தவர்களிள் ஒருவரான கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். புட்டசுவாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், ஆதார் அட்டை இல்லாதவர்களின் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.அப்போது மத்திய அரசு தரப்பிலும், ஆதார் அட்டை வழங்கும் ஆணையம் சார்பிலும் தெரிவிக்கப்பட்ட பதிலில், ஆதார் அட்டை பெறுவது கட்டாயமல்ல என தெரிவிக்கப்பட்டது.விரும்பியவர்கள் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டது. எந்த அடையாள அட்டையும் இல்லாத சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில்தான் ஆதார் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி