பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றஆயிரம் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 113பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை (அக்.8) வழங்கப்படுகிறது.இதுபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகக் குறைவான தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பகுதி வாரியாக இந்தப் பயிற்சி வழங்கப்படும்.பள்ளியை எப்படி நிர்வகிப்பது, கற்பித்தலை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கமேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.இத்தகைய பயிற்சிகளின் மூலம் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி