10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள் 25ம் தேதி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2013

10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள் 25ம் தேதி வெளியீடு.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் நாளை முதல், 30ம் தேதி வரை, மாணவர் தேர்வெழுதிய மையங்களில்
வினியோகிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அறிவித்துள்ளார்.பிளஸ் 2 தனித்தேர்வை, 40 ஆயிரம் பேரும், 10ம் வகுப்பு தனித்தேர்வை, 50 ஆயிரம் பேரும் எழுதினர். இதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் தேர்வெழுதிய மையங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு பிளஸ் 2 தனித்தேர்வு மதிப்பெண் பட்டியல் டிச., 17ம் தேதியும், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கடந்த ஜனவரி 2ம் தேதியும் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, இரு மாதங்கள் முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. மேலும், கடந்த ஆண்டு வரை தேர்வு முடிவு ஒரு தேதியிலும் மதிப்பெண் பட்டியல், ஒரு தேதியிலும் வழங்கப்பட்டன.ஆனால் இந்த ஆண்டு, இரு தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலும் ஒரே நேரத்தில் வழங்கப்படுகின்றன. தேர்வுத் துறையில், சமீபத்தில் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட முடிந்ததாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.தனித்தேர்வுகளின் விடைத்தாள் நகல் பெறுதல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு, விண்ணப்பம் செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி