கடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2013

கடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி.


பள்ளிகளில் கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவதால் 100 சதவீத தேர்ச்சி கேள்விக்குறியை எட்டியுள்ளது.தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை அடைய கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் பள்ளிகளில் பாடங்களுக்கு தேவையான ஆசிரியர்களை இப்பணியிடங்களுக்கு நியமிக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் ஏற்கனவே அதிக ஆசிரியர்கள் இருக்கும் பாடங்களுக்கே தற்காலிக ஆசிரியர்கள் சில பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக, கணிதம், ஆங்கிலம் போன்ற கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் தமிழ், பொருளாதாரம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொடர்ந்து பள்ளிகளில் கடின பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் 100 சதவீத தேர்ச்சி என்பது கேள்விக்குறியாகும்.மேலும், ஏற்கனவே பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் கூடுதல் பணியாக தற்காலிக ஆசிரியராக சில பள்ளிகளில் நியமனம் பெற்றுள்ளனர். இதனால் ஒரே ஆசிரியர் இரு சம்பளத்தை தலைமை ஆசிரியர்கள் உதவியுடன் பெறும் ‹ழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பள்ளி வாரியாக இதனை ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை செய்து பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்கவும், கடினமான பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்கவும், இதில் தொடர்ந்து குளறுபடிகளை செய்து வரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி கிடைக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி