ஏமாற்றிய இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.2013)- நொந்து போன ஒருங்கிணைப்பாளர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2013

ஏமாற்றிய இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.2013)- நொந்து போன ஒருங்கிணைப்பாளர்கள்.

இன்று(10.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு பட்டியலில் 42வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. 41வது வழக்காக பட்டியலிடப்பட்ட அணு உலை வழக்கு நீதி மன்றத்தின் பாதி நேரத்தை விழுங்கிவிட்டது.எனவே இரட்டைப்பட்டம் வழக்கு தன் எல்லையைத் தொடாமலேயே பெட்டிக்குள் சுருங்கிவிட்டது. இந்த நிகழ்வு வழக்கை எடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்ததாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை அமர்வில் உள்ள நீதியரசர் சத்தியநாரயணா வருவது சந்தேகம் என்பதால் இனி வழக்கு செவ்வாய் கிழமைதான் வருவதற்கான சாதிதியக்கூறுகள் உள்ளதாக தெரிகிறது. அப்படியே வந்தாலும் அன்று வழக்கில் வாதாடக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் வேறு எங்கும் செல்லாமல் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஒட்டு மொத்தத்தில் விடை காண முடியாத விளங்க முடியாத வழக்கு இது. நாமும் மற்றவர்களைப்போல் ஆவலாக உள்ளோம். தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி