முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில்தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில்தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சி.

தருமபுரியில் புதன்கிழமை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கானபோட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுநிலைப்பட்டதாரி
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில்தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சிப் பெற்றனர். இவர்களது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி செவ்வாய், புதன்கிழமை ஆகியஇரண்டு நாள்கள் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்நடைபெற்றது. இதில், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி துணை இயக்குநர் புகழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் நாளில் 92 பேரின்சான்றிதழ்களையும், இரண்டாம் நாளில் 92 பேரின் சான்றிதழ்கள் என மொத்தம்184 பேரின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

2 comments:

  1. Do you know, about equivalent subjects candidates for TET and PG since court ordered to give post for last year,please conduct 8148622030

    ReplyDelete
  2. Dear TRB TET EXAM mathiri PG TRB um final year B Ed students ELUTHA ""ALLOW"" PANNUNKA AND EPPA NADANTHA """PG TRB "" EXAM LA B Ed finel YEAR CANDITATE PASS PANNINA AVANKALUKKUM """""JOB"" KUDUNKA PLEEEEEEESE UNKA PATHAM THOTTU KETTU KOLKIREN ETHA SAITHAL EN PARAMBARAYY UNKALA VANANKUM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி