மாணவர்களின் கல்விக்கு தடையாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

மாணவர்களின் கல்விக்கு தடையாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம்.

ஈரோடு மாவட்டம், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில், 935 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, 40 ஆசிரியர் மற்றும்
ஆசிரியைகள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் கலைச்செல்வி என்பவர் தலைமை ஆசிரியையாக உள்ளார்.இங்குள்ள ஆசிரியர்களுக்குள் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு பிரச்சனை ஏற்ப்பட்டு வந்துள்ளது. ஆசிரியர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் மற்றவர்கள் மீது மாணவர்களை தூண்டிவிட்டு பிரச்சனை செய்தல், பெற்றோர் மற்றும் மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செய்தல், மாணவர்களை வகுப்புக்கு செல்லாமல் இருக்க வைத்தல் உட்பட பல ஒழுங்கீன நடவடிக்கைகளில் சில ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் மாலதி அடங்கிய குழுவினர், இப்பள்ளியில் இரண்டு நாள் முகாமிட்டு, ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரனை நடத்தினர்.அப்போது, மாணவர்கள் கல்வி பயில தடையாகவும், பள்ளிக்குள் ஒழுங்கீனமாக நடந்ததாகவும் தெரிந்த அப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சித்தாகவுண்டர், இடைநிலை ஆசிரியர் ஜீவானந்தம், உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் ஆகிய மூவரும் “சஸ்பெண்ட்”செய்யப்பட்டனர்.ஆசிரியர்களை சரியாக வழிநடத்த தவறிய பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி கட்டாயமருத்துவ விடுப்பில் செல்லும்படி, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டார். இதுதவிர, உடற்கல்வி ஆசிரியையான மற்றொரு கலைசெல்வி, குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இப்பள்ளியின் பொறுப்புகளை, உதவிதலைமை ஆசிரியர் தனசேகரன் தொடருமாறு முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி