நிதியின்மையால் சிறப்பாசிரியர் நியமனத்தில் தொய்வு; 2,000 பேர் காத்திருப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2013

நிதியின்மையால் சிறப்பாசிரியர் நியமனத்தில் தொய்வு; 2,000 பேர் காத்திருப்பு.

கல்வித்துறையில் பகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு, 2000 பேர், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டும், இன்னும் பணி உத்தரவு வராததால், ஏமாற்றத்தில் உள்ளனர்.தமிழக கல்வித்துறையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், கடந்தாண்டு,
ஓவியம், கட்டட வரைவாளர், தையல் உள்ளிட்ட பாடங்களுக்கு, 16,000 பகுதி நேர சிறப்பாசிரியர்கள், மாதம், 5000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில், பணி அமர்த்தப்பட்டனர். இதில், வேறு பணி கிடைத்து சென்றவர்கள், பணிக்கு வராமல் இருந்தவர்கள், என, மாநிலம் முழுவதும், 2000 பணியிடங்கள் காலியாகின. அப்பணியிடங்களை நிரப்ப, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜூன் மாதம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், 5 மாதங்களாகியும், பணி உத்தரவு வரவில்லை. இதை நம்பி, வேறு வேலைக்கும் செல்லாமல் உள்ளவர்கள், மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.தேர்வானவர்களில் சிலர் கூறியதாவது: வாரத்தில் மூன்றரை நாட்கள் மட்டுமே பணி. இதற்காக, ஏற்கனவே பார்த்த வேலையையும்விட்டுவிட்டு, நேர்காணலில் கலந்து கொண்டு, பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், காத்திருந்தோம். ஆனால், தற்போது, நிதியின்மையால், தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பதில் தாமதமாவதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. தேர்தல் அறிவிப்பு வந்து, திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டால், எங்கள் நிலை கேள்வி குறியாகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நேர்காணல் நடத்த வந்த உத்தரவின்படி, நடத்தினோம். ஆனால், சென்னையிலிருந்து நியமனம் குறித்த தகவல், வராததால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி