தனியார் பள்ளிகளுக்கே பொதுத்தேர்வு மையம்: அரசுப் பள்ளிகளுக்கு ஆர்வமில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2013

தனியார் பள்ளிகளுக்கே பொதுத்தேர்வு மையம்: அரசுப் பள்ளிகளுக்கு ஆர்வமில்லை.

பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையம் அமைப்பதில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகளில், 150 மாணவர்கள்; நகரங்களில் 200 பேர், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதினால், அப்பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை, இதை விட குறைவாக இருந்தால், அருகில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று எழுத வேண்டும். சில ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளுக்கே, தேர்வு மையம் அனுமதிக்கப்படுகிறது. "தேர்வு மையம் அமைந்தால், பணிச்சுமை அதிகரிக்கும்" என்ற மனநிலையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்; இதனால், அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதைப் பயன்படுத்தி, சில தனியார் பள்ளிகள், அருகில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்விருப்பக் கடிதம் பெற்று, தேர்வு மையங்களை தட்டிச் செல்கின்றனர்.  "கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு, இதுவும் ஒரு காரணம்" என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசுப் பள்ளிகள் விண்ணப்பித்தால், மையம் அமைக்க அனுமதிக்கிறோம். அருகில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே, தனியார் பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி