ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; அக்.22, 23ல் சான்று சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2013

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; அக்.22, 23ல் சான்று சரிபார்ப்பு.

ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய தேர்வில்,பட்டதாரிகளுக்கு, அக். 22, 23ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2,881 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு,
ஜூலை 21ல் டி.ஆர்.பி., தேர்வு நடத்தியது. இதில், 1.60 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ் பாட வினாத்தாளில், ஏற்பட்ட குளறுபடியால் அப்பாட முடிவு வெளியாகவில்லை. ஆங்கிலம், வணிகவியல், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன.ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணியை, அக்.22, 23 ஆகிய இரு நாட்கள் நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது; ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், அக்.,17ல் சென்னையில் நடக்கிறது. அன்றைய தினம், சான்று சரிபார்ப்பிற்கான விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிப்பர். தமிழ் பாடத்தை தவிர்த்து, அனைத்து பாடங்களும் பார்க்கப்படும், என்றார்.

1 comment:

  1. Cv date Oct 22 and 23 verify u see trb site

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி