3 ஆண்டுகளாக சம்பளமின்றி தவிக்கும் சிறப்பாசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2013

3 ஆண்டுகளாக சம்பளமின்றி தவிக்கும் சிறப்பாசிரியர்கள்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும், மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை கல்வித்திட்டத்தில், பணியாற்றும் சிறப்பாசிரியர்கள், மூன்று ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல்
தவித்து வருகின்றனர்.தமிழகத்தில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென, மத்திய அரசு நிதியுதவியுடன், &'ஐ.இ.டி.எஸ்.எஸ்.,&' என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பார்வைத்திறன் குறைவு மற்றும் கேட்கும் திறன் இழப்பு, மன வளர்ச்சி குறைவு உள்ளிட்ட, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கல்விக்காக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் துவக்கப்பட்டன.கடந்த, 2009-10ல் துவக்கப்பட்ட இத்திட்டத்தில், பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்களுக்கு, அந்தக் கல்வி ஆண்டுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின், இன்றுவரை, மூன்று ஆண்டுகளாக, சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும், பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள், தவித்து வருகின்றனர்.இது குறித்து, சிறப்பு ஆசிரியர்கள் கூறியதாவது: இத்திட்டத்தின் பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு வழங்கும் சம்பளத்தையே, நம்பி உள்ளோம். இதில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, குடும்பம் உள்ளது. மூன்று ஆண்டுகளாக சம்பளம் இல்லாததால், வறுமையில் வாடுகின்றனர். பலர் கடன் வாங்கி, குடும்ப தேவைகளை பூர்த்திசெய்கின்றனர். இதற்கு, அதிக வட்டி செலுத்த வேண்டி உள்ளது.இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. இனிமேலாவது, அரசு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, சிறப்பாசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி