தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், இன்றுமுதல் (அக்.,1) தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள்,அரசு
மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும். இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது. தற்போது 25 சதவீதம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீராய்வு அடிப்படையில், 1.10.2013 முதல் 25 சதவீதமாக இருந்த தொழில் வரி, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இயக்குனர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வரி உயர்வு தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி