முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2013

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.ஆசிரியர் தேர்வு வாரியம்,
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாட தேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது, மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விவாதிக்க, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசின் ஆலோசனையை பெற்று, அதனடிப்படையில், முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி., எந்த முடிவை எடுத்தாலும், முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமனம், தள்ளிப்போகும். பிளஸ் 1, பிளஸ் 2மாணவர்கள், பாதிக்காத வகையில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், தற்போதைய சூழல் காரணமாக, தமிழ் ஆசிரியர் நியமனம், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

10 comments:

  1. Eppadiya padithavargal valkail trb board vilaiyaduvathu. Aduthathu tetla yavathu olunga trb board work panna muyarchi pannunga.

    ReplyDelete
  2. ple trb TET result avathu publish panunga..dont play wit our life..

    ReplyDelete
  3. When ill trb board publish the tet result? How many question wrong ? How many bonus mark ? How many both answer? Plz inform ?

    ReplyDelete
  4. 10நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்-ஆசிரியர் தேர்வு வாரியம்
    ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
    கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்ததேர்வை,சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.
    அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. YET result tomarow publish

    ReplyDelete
  6. when will be tet exam result will come?

    ReplyDelete
  7. pg exam result when?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி