சிறப்பு முகாம்கள் மூலம் ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2013

சிறப்பு முகாம்கள் மூலம் ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரிக்கை.

மாவட்ட அளவில் குறைதீர் சிறப்பு முகாம்கள் நடத்தி,ஆசிரியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
அதன் துணைத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமையில் ஆவாரங்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளிபாளையம் வட்டச் செயலர் எஸ்.முத்துக்குமரன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் வி.பாலமுரளி,ஜெ.அருள்சுந்தரரூபன்,பொதுக் குழு உறுப்பினர் பி.இளையராஜா முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் கே.தங்கவேல் செயலறிக்கை வாசித்தார். முன்னாள் மாநிலப் பொதுச் செயலர் முருக.செல்வராசன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பள்ளிபாளையம் ஒன்றியத்தில் 65-க்கும் மேற்பட்ட பள்ளிகளை நிர்வகிக்கவும்,ஆசிரியர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும்,அரசின் 14 வகையான கல்விசார் திட்டங்களைநிறைவேற்றவும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்,அமைச்சுப் பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.பள்ளிபாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்கை விரிவானத் தணிக்கை ஆய்வுக்குள்படுத்த வேண்டும். ஒன்றிய,மாவட்ட அளவில் ஆசிரியர் குறைதீர் முகாம்கள் நடத்தி,பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். ஆசிரியர்களுக்கு சனி,ஞாயிறுகளில் பணியிடைப் பயிற்சி,கல்விசார் பணிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தக் கூடாது.தலைமையாசிரியர்,ஆசிரியர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். பள்ளிகளில் தூய்மை,சுகாதாரத்தைப் பேணி காக்கத் துப்புரவுப் பணியாளர்,காவலர்,நடந்தாட்டி,உதவியாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழகஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.ஆசிரியர் பணி நியமனத்துக்கு லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில்,தாற்காலிகத் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். கூட்டத்தில்,கூட்டணியின் ஈரோடு மாவட்டச் செயலர்யு.கே.சண்முகம்,மாவட்ட துணைத் தலைவர் ஆ.சரவணன்,துணைச் செயலர் பி.மாரிமுத்து,வட்டத் தலைவர் பி.கண்ணன்,பொருளாளர்எம்.ஜிலானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.‹›Ho

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி