கல்லூரிகளில் காலியிடம் நிரப்ப அரசு முன் அனுமதி தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2013

கல்லூரிகளில் காலியிடம் நிரப்ப அரசு முன் அனுமதி தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் .

அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் காலியாகும் போது, அந்த இடங்களை நிரப்ப, அரசின் முன் அனுமதி தேவையில்லை" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம் புதனம்பட்டியில் கடந்த, 1967ல், நேரு மெமோரியல் கல்லூரி துவங்கப்பட்டது. இது, அரசின் உதவி பெறும் கல்லூரி என்பதால், கல்லூரியை நிர்வகிக்கும் குழு ஒன்று உள்ளது. இறப்பு, இடமாற்றம், ஓய்வு, பதவி உயர்வு, ராஜினமா மூலம், 16 பணியிடங்கள் காலியானது. இந்த பணியிடங்களுக்கு, அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி உள்ளது.காலியிடங்களை நிரப்ப, முதலில், கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கியது. பின், "காலியிடங்களை நிரப்பக் கூடாது" என உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவால், நூலகர்கள், உடற்கல்வி இயக்குனர், துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல், கல்லூரி இயங்கி வந்தது. இதையடுத்து, கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட காலியிடங்களை (ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள்) நிரப்ப, அரசின் முன் அனுமதி தேவையா, இல்லையா என்கிற பிரச்னை எழுப்பப்பட்டது. மனுவை, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. கல்லூரி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகினர்."டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு:
இதே பிரச்னை தொடர்பாக, ஏற்கனவே பல வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துஉள்ளது. அந்த உத்தரவுகளை, அரசும் பின்பற்றி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கல்லூரி கல்வி இயக்குனரின் முன் அனுமதி பெற்று தான், ஒப்புதல் அளிக்கப்பட்ட காலியிடங்களை கல்லூரி நிர்வாகம் நிரப்ப வேண்டும் என்பது சரியல்ல.தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களை நிரப்ப, முன் அனுமதி பெற தேவை இல்லை.சட்ட விதிகளை மீறி,ஒப்புதல் அளிக்கப்பட்ட காலியிடங்களில், கல்லூரி குழு நியமனம் செய்தால், அந்த இடத்தில் நியமிக்கப்பட்டவருக்கு, உதவித் தொகை வழங்க, கல்லூரி கல்வி இணை இயக்குனர் மறுக்கலாம்.ஆசிரியர்கள் நியமனங்களைப் பொறுத்தவரை, பல்கலைக் கழகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, முழு தகுதி பெற்றவராக, இருக்க வேண்டும். ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களைப் பொறுத்தவரை, அரசு நிர்ணயித்துள்ள தகுதியை பெற்றிருக்க வேண்டும். காலியிடங்களை நிரப்பும் போது, விதிகளில் கூறியுள்ள நடைமுறைகளை, கல்லூரி குழு பின்பற்ற வேண்டும். பணியிடங்களுக்கு யாரும் போட்டியிடவில்லை என்றால், அந்த நியமனத்துக்கு, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு, &'டிவிஷன் பெஞ்ச்&' உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி