மாணவர்கள் தான் ஆசிரியர்களை அடையாளம் காண வைக்கின்றனர்" என இடைநிலை கல்வி திட்ட, மாநில இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம்
பல்கலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் நடந்த, மண்டல அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி பணிமனையை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் தான், அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். 10,12 ம் வகுப்புமாணவர்களின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது.6 ம் வகுப்பு முதல் மாணவர்களை கண்காணித்தால், அவர்களின் கற்றல்திறனை அடையாளம் காண முடியும். தலைமை ஆசிரியர்கள், அதிக மார்க் பெறும் மாணவர்களை விட, குறைந்த மார்க் பெறுபவர்களை கவனித்து, அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மாணவர்களை, கல்வியில் முன்னேற செய்வது, நாட்டை முன்னேற செய்வதற்கு சமம்.ஒரு பள்ளியில் ஒரு மாணவர் முதல் மார்க் பெறுவதை விட, அனைத்து மாணவர்களும் வெற்று பெறுவது தான் பெருமை. ஒரு மாணவரின் வெற்றிக்கு, அவனதுபெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாணவர்கள் தான், ஆசிரியர்களை அடையாளம் காண வைக்கின்றனர். பெற்றோரின் கனவுகளுக்கு வழி காட்டுபவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்" என்றார்.விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி