மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2013

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்.

மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நாடு முழுவதும் ஒரே பொதுநுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்துசெய்ததை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.நாடு முழுவதும்
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, NEET எனப்படும் பொது நுழைவுத்தேர்வை நடத்த MCI முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் பரவலான அளவில் எதிர்ப்பு எழுந்தது.சாதாரண வெகுமக்களை மருத்துவ படிப்பை மேற்கொள்வதிலிருந்து தடுக்கும் திட்டம் இது என்று பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தமுடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி கபீர் தலைமையிலான அமர்வு, கடந்த ஜுலை மாதம், இந்த ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை செயல்பாடு தொடர்பான முடிவிற்கு தடை விதித்தது. மேலும், இப்படியொரு முடிவை மேற்கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அரசியல் சட்டப்படி அதிகாரம் இல்லை என்று தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.ஆனால், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தனது முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி