மதுரையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின், சம்பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இது, தனித்தேர்வாளர்களிடையே
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அரசு பொதுத்தேர்வுகளை, தனித் தேர்வர்கள் ஏப்ரல், ஜூன் மற்றும் அக்டோபரில் விண்ணப்பித்து, தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம். இம்முறையில், மதுரை பேங்க் காலனி ராஜாராமன் மகன் சிரஞ்சீவிகுமார், பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அதற்காக, ஆக.,8 மற்றும் 24, செப்.,9 மற்றும் 11 ஆகிய தேதிகளில், மதுரைக்கல்லூரி பள்ளியில் நடந்த செய்முறை தேர்வுகளில் பங்கேற்றார்.இதையடுத்து, சிரஞ்சீவிகுமார் செப்.,30ல் தேர்வு எழுதினார். ஆனால், "விண்ணப்பதாரர் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாமல் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதால், இதை ஏற்க இயலாது. எனவே, விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது,' என அவருக்கு தேர்வுத்துறை நேற்று கடிதம் அனுப்பியது.ராஜாராம் கூறியதாவது: எனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வை"பிரைவேட்" ஆக எழுதி, அறிவியலில் மட்டும் தோல்வியடைந்தார். அதன் பின், ஏப்., மற்றும் ஜூனில் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. பின், செய்முறை தேர்வில் பங்கேற்று, அக்.,ல் எழுத"ஆன்லைனில்" விண்ணப்பித்து, "ஹால் டிக்கெட்" பெற்றோம். செப்.,30ல் தேர்வு எழுதினார்.ஆனால், தேர்வு எழுதிய பின், அக்.,1ல், விண்ணப்பமே நிராகரிக்கப்படுவதாக தேர்வுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது குழப்பமாக உள்ளது. இதற்கு கல்வி அதிகாரிகளும் உரிய பதில் அளிக்கவில்லை, என்றார்.தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனித்தேர்வு முறையில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அக்.,ல் தேர்வு எழுத வேண்டுமென்றால்அந்த ஆண்டில் மார்ச்சிற்குள் செய்முறைத் தேர்வில் அந்த மாணவர் பங்கேற்க வேண்டும். ஆனால், ஏப்.,ல் செய்முறை தேர்வில் பங்கேற்று,"ஆன்லைன்" மூலம் விண்ணப்பித்து, "ஹால்டிக்கெட்" பெற்று பலர், அக்டோபரில் தேர்வு எழுதி விடுகின்றனர். அவ்வாறு எழுதும்போது, அந்த மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்க தேர்வு துறை வலியுறுத்துகிறது. இக்குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி