சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2013

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு.

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது
குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கு உதவித் தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இதுவரை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு www.momascholarship.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி