விருதுநகர் மாவட்டத்தில்,பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாகுறையால், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் பாதிப்பு இல்லை. வேறு பள்ளி ஆசிரியர்கள் கொண்டு, வாரத்தில் இரண்டு நாள்,பாடம் நடத்தப்பட்டு வருகிறது,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்:பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தில்,இந்தாண்டாவது விருதுநகர், முதல் இடத்தை தக்க வைக்குமா...அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி குறைந்த பள்ளி விபரங்கள், கணக்கிடப்பட்டு, அனுபவம் வாய்ந்த, சிறப்பு ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, பாடத்திற்கு இரண்டு தலைமையாசிரியர்கள், 10 ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், மொபைல் போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளதே?மாணவர்கள், பள்ளிக்கு வரும்போது, மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, வைத்திருப்பதாவது கண்டுபிடிக்கப்பட்டால், பறிமுதல் செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். ஆசிரியர்கள், பள்ளிகளில் ஓய்வு நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.பல பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. அப்படியே இருந்தாலும்,தண்ணீர் இருப்பதில்லை. இதனால், மாணவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளதே.எந்தெந்த பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை, தண்ணீர் வசதி இல்லை என்பது குறித்து, தலைமையாசிரியரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். இதை, எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில் சீரமைக்க உள்ளோம்.பள்ளிகளில் சுற்றுசுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. விஷ ஜந்துக்களால், மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதே.11 பள்ளிகளில் சுற்றுசுவர் கட்ட, தலைமையாசிரியர்கள் கருத்துரு அனுப்பியுள்ளனர். அரசுக்கு அனுப்பி, சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் பள்ளிகளில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்.பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால்,மாணவர்கள் கல்வி கற்பதில்பாதிப்பு உள்ளதா.ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால், ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வேறு பள்ளி ஆசிரியர்கள், வாரத்தில் இரண்டு நாள், மாற்று பணியாக, பாடம் நடத்தி வருகின்றனர். வாரம் ஒரு முறை, மாணவர்களுக்கு " டெஸ்ட்' நடத்தி வருகிறோம்.மாணவர்களுக்கு, இந்த பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டதா.அனைத்து புத்தகங்கள் மற்றும் மூன்று செட் சீருடை வழங்கப்பட்டு விட்டன.சில பள்ளிகளில், மாணவர்களிடம் ஆசிரியர்கள், கடுமையாக நடந்து கொள்வதாக புகார் உள்ளதே.மாணவர்களிடம் அன்புடன் பழக, ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்தப்பட்டு வருகிறது.82 பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில வழி கல்வி நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2, 000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மெட்ரிக்., பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி அளித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Oct 7, 2013
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Matric palli teachers govt school teachersku training kodupatharku , an matric teachers tet eluda vandum
ReplyDelete