தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை.


தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட தடை செய்வதென பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத
மாணவ, மாணவிகளுக்கு தோல்வியுற்ற பாடங்களை எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுக்குஇருமுறை நடக்கிறது. தனித் தேர்வர்கள் என அழைக்கப்படும் இவர்களுக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட பின் அந்தந்த தேர்வு மையத்தில் மதிப்பெண் சான்றுகளை பெறலாம்.இணையதளத்தில் முடிவை பார்க்கும்போது மீண்டும் தேர்ச்சி வாய்ப்பை இழக்கும் சில மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்டநாளுக்கு பின், அவர்களது மதிப்பெண் சான்று பள்ளி தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.நீண்ட நாள் கழித்து தேவையெனில் மதிப்பெண் சான்றுகளை பெற முடியாமல் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் சான்று கோரும் நிலை உருவாகிறது. இவற்றை தவிர்க்க தேர்வு முடிவு விவரத்தை இணையதளத்தில் வெளியிடுவதில்லை என, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "2013-14ம் கல்வி ஆண்டிலேயே இணையதளத்தில் தனித்தேர்வர்கள் முடிவு வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இம்முறை தேர்வு முடிவு வெளியான அன்றே மதிப்பெண் சான்று வழங்கப்பட்டது. இதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்," என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி