மாணவர்கள் விரும்பும் நாளில் தீபாவளி விருந்து: விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2013

மாணவர்கள் விரும்பும் நாளில் தீபாவளி விருந்து: விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரை.

விடுதி மாணவர்கள் விரும்பும் நாளில், தீபாவளி விருந்துஏற்பாட்டை செய்ய வேண்டும்" என அனைத்து நலத்துறை விடுதி காப்பாளர்களுக்கும், நலத்துறைகள்
அறிவுரை வழங்கி உள்ளன.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளில், 97,239 மாணவர்; 42 பழங்குடியினர் நல விடுதிகளில், 2,742 பேர்; உண்டு உறைவிடப் பள்ளிகளில் 39,899 பேர் உள்ளனர். அதே போல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் 710 விடுதி; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 572 விடுதி; சிறுபான்மை நலத்துறையின் கீழ் 12 விடுதிகளும் செயல்படுகின்றன. இவற்றில், 80,064 மாணவர் தங்கி உள்ளனர்.இம்மாணவர்கள், தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒரு மாணவருக்கு 30 ரூபாய் வீதம் அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகையின் போது பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்று விடுவர். அதனால் விடுதியில் பண்டிகை கொண்டாட முடியாமல் போய் விடுகிறது.இந்நிலையில், மாணவர்கள் எந்த நாளில் விருப்பப்படுகின்றனரோ, அந்த நாளில் தீபாவளிவிருந்து வைக்கலாம் என அனைத்து நலத்துறைகள், விடுதி காப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி