அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர் பொது தேர்வு எழுத தடை இல்லை: இயக்குனர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2013

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர் பொது தேர்வு எழுத தடை இல்லை: இயக்குனர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும், 750 பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல்இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 4 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில், 10ம் வகுப்புமற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அதிக அளவில் உள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள அளவை விட குறைவாக இடம் உள்ள, பள்ளிகள் மற்றும் இரு இடங்களில் இயங்கும் ஒரே பள்ளிகள் ஆகியவை, பிரச்னையில் சிக்கி உள்ளன.அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், பொதுத் தேர்வை எழுத முடியுமா என, சந்தேகம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில்,பள்ளிகள் மீது, தேர்வுத் துறை, கடுமையான கெடுபிடி நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர், பெற்றோர் மத்தியில், பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில்,இந்த பிரச்னை குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, நேற்று கூறுகையில், ''அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர், பொதுத் தேர்வை எழுதுவதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. தேர்வை எழுதுவதற்கு, அவர்களுக்கு, எவ்வித தடையும் இல்லை. தடை விதிப்பது போன்ற எந்த உத்தரவும், தேர்வுத் துறையிடம் இருந்து, எங்களுக்கு வரவில்லை. எனவே, மற்ற பள்ளி மாணவ, மாணவியரைப் போல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், பொதுத் தேர்வை எழுதலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி