கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் கட்டணம் வழங்க இழுபறி: அதிகாரிகள் மவுனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2013

கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் கட்டணம் வழங்க இழுபறி: அதிகாரிகள் மவுனம்.

கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி,தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்டகட்டணத் தொகை குறித்த விவகாரத்தில்,கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இதனால்,
எதிர்காலத்தில் இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி (ஆர்.டி.இ.,),ஒவ்வொருதனியார்,மெட்ரிக்,சி.பி.எஸ்.இ.,பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகள்,எய்ட்ஸ் பாதிப்பு உள்ள குழந்தைகள் மற்றும் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு,தொடக்க நிலை வகுப்புகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில்25சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும்.கோவை மாவட்டத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில்,நடப்பு கல்வியாண்டில்4135இடங்களுக்கு2163மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுவிதிமுறைப்படி, 50சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளால் கூறப்படுகிறது.இச்சட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் முதல் தவணைக்கான பணத்தை செப்டம்பரில் தரவேண்டும். ஆனால்,அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.ம.தி.மு.க.,மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், "கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி,தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசும்,மாநில அரசும் இரண்டுகட்டமாக செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதற்கான கட்டணத் தொகையை செலுத்தவேண்டும்."அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில்,தனியார் பள்ளிகளில் மாணவர்களை நிறுத்தவோ,பணம்கேட்டு துன்புறுத்தவோ வாய்ப்புகள் உள்ளன. மாநிலம் முழுவதும்,பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்"என்றார்.இதற்கான,கோரிக்கை மனு முதன்மை கல்வி அதிகாரியிடம் ம.தி.மு.க.,சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி,தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசும்,மாநில அரசும் இரண்டு கட்டமாகசெப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதற்கான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும்.அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில்,தனியார் பள்ளிகளில் மாணவர்களை நிறுத்தவோ,பணம் கேட்டு துன்புறுத்தவோ வாய்ப்புகள் உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி