ஆன் லைனில்' வாக்காளர் பெயர் சேர்த்தல்: கட்டணம் நிர்ணயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2013

ஆன் லைனில்' வாக்காளர் பெயர் சேர்த்தல்: கட்டணம் நிர்ணயம்.

2014 ஜன., 1 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை, தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது; அக்., 31 வரை, இப்பணிகள் நடக்கும். திருத்த பணிகளுக்கு பின், ஜன., 6 ல், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தாலூ, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்க்கும் பணிகள் நடக்கின்றன. தனியார் "பிரவுசிங்' மையங்களிலும், "ஆன் லைன்' மூலம், பெயர் சேர்க்க, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.கட்டணம்: பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள், இடமாற்றம், புகார்களுக்கு, 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கவேண்டும். வாக்காளர் பட்டியல் நகல் (ஒரு பக்கத்திற்கு) 3 ரூபாய்; பெயர், ஓட்டுச்சாவடி பெயர், விண்ணப்பத்தின் நிலை, புகார் மனுவின் நிலை விபரங்கள் அறிய,2 ரூபாய் என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கவேண்டும் என,தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி