அரசு பள்ளிகளில், 10, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஒன்றிய அளவில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை
அறிந்து, அரசுக்கு தகவல் தர வேண்டும்.அரசு பொதுத் தேர்வுகளில்,தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது. குறிப்பாக,சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், விருத்தாச்சலம், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளன.இதை தவிர்த்து,தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய மாவட்டம் மட்டுமின்றி, அனைத்து மாவட்ட மாணவர்களும் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, சி.இ.ஓ., அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் சி.இ.ஓ., மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழுவினை,ஒன்றியம் வாரியாக அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிந்து, அரசுக்கு தகவல் தர வேண்டும்.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது; அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிட விபரம் சேகரித்துள்ளோம். மாணவர்களின் மனநிலை அறிந்து,சிறப்பு வகுப்பு நடத்தப்படும், என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி