10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்.


தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே
அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும்.ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும், ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர், ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன், ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும். இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும்.அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி