தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை
(10-ம் தேதி) நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையத்துக்கு வர வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர் பெயர், பதிவெண், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும இணையதளம் மற்றும் காவல்துறை இணையதளம் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.அத்துடன் அழைப்புக் கடிதங்கள் அஞ்சலகம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் பெயர் இருந்தும் அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 7.11.13தேதி முதல் 9.11.13 தேதி மாலை 5 மணி வரை நேரில் வந்து கடித நலை பெற்றுக்கொள்ள கோரப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி