பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து
மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் 13 பஞ்.,யூனியன்களில் 79 பள்ளிகளில் எங்கள் அமைப்பு சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 43 சதவீத பள்ளிகளில் குடிநீர் இல்லை. 63 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. 65 சதவீத பள்ளிகளில் தனித்தனி வகுப்பறை வசதிகள் இல்லை. 61 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானமும்,37 சதவீத பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவும், 29 சதவீத பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களும் இல்லை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரிய, ஆசிரியைகளும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள், தனித்தனி வகுப்பறைகள், இட வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம், சுற்றுசுவர், நூலக வசதிகளை செய்ய வேண்டும். பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு முறையாக செயல்படுத்த வேண்டும்.மோசமான நிலையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். போதுமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே எதிர்பார்க்கும் கல்வி முன்னேற்றத்தை அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி