பள்ளி தகவல் தொகுப்பு படிவ விபரங்களை 11ம் தேதி சமர்ப்பிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அனைவருக்கும் இடைநிலை கல்வி
திட்டத்தின் சார்பில் பள்ளி தகவல் தொகுப்பு படிவம்குறித்து நெல்லை மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாளை பெல் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது,முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு வழிகாட்டுதலின் பேரில் கல்வி மாவட்ட அதிகாரிகள் டோரா, பத்மா, வசந்தி ஆகியோர் முன்னிலையில் இப்பயிற்சி நடந்தது. மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் செல்வநாயகம், ஆறுமுகராஜன், எஸ்.எஸ்.ஏ உதவியாளர்கள் கார்த்திகா, நாயகி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இந்த படிவத்தில் பள்ளிகள் குறித்த விபரங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி, ஆசிரியர் பணியிடம் குறித்த விபரங்களை எந்தவித தவறுகள் இல்லாமல் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. திட்ட பணிகளுக்கு இந்த புள்ளி விபரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் இதனை பூர்த்தி செய்து 11ம் தேதி அளிக்க உத்தரவிடப்பட்டது.ஏற்பாடுகளை திட்ட பணியாளர்கள் சங்கர் பாலாஜி, சாந்தி, அருள்ஜோதி, சிவலிங்கம், மாரி சங்கர், பாப்பு செய்திருந்தனர்.நேற்று மதியம் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு இப்பயிற்சி நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி