தமிழகத்தில் தமிழில் வாசிக்கும் திறன் பெற்றவர்கள் 64 சதவீதம்பேர் என கண்டறியப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைவாக
உள்ள மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது
இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலி பணியிடங்களாக வைத்திருக்க கூடாது. அப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்களுககு ஊதியமாக மத்திய அரசு நிதி எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த தொகை முழுவதும் மாநில அரசுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க தலைப்பின் கீழ் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக பள்ளிகளில் துணை பாட நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 6-8ம் வகுப்புகளில் மாநில அளவில் 64 சதவீதம் தமிழ் மொழியில் வாசித்தல் திறன் உள்ளது. இவற்றை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறை, தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து செயல்பட வேண்டும். வாசித்தல் திறனில் தர்மபுரி, சேலம், விழுப்புரம், சென்னை மாவட்டங்கள் மிகவும் பின் தங்கிய நிலை உள்ளது.
நாமக்கல், கோவை மாவட்டங்களில் ஆங்கிலத்தில் எழுதும் திறன் மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் கணக்கு பாடத்தில்பின்தங்கி காணப்படுகிறது. கணித உபகரணங்களை பயன்படுத்த கற்று கொடுத்து தேர்ச்சிசதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.அனைத்து குழந்தைகளும் படித்தல், எழுதுதல், கேட்டல் போன்ற அடிப்படை திறன்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் தவறாமல் செல்ல வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
கம்ப்யூட்டர் வழி கற்றல் முறையை உடனடியாக முழுமைப்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்த அனைத்து அலுவலர்களும் முன் வர வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி