மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர்,10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே,
இந்த தேர்வுகளும் நடக்கும். காலை, 10:00 மணி முதல், 10:10 வரையான 10 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க வழங்கப்படும்.அடுத்த, 5 நிமிடம், விடைத்தாளில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 10:15ல் துவங்கும். இந்த 15 நிமிடங்கள், இரு தேர்வுகளுக்கும் பொருந்தும். எனினும், பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரம் என்பதால், 10:15க்கு துவங்கி, 1:15க்கு முடிவடையும். 10ம் வகுப்பு தேர்வு, 10:15க்கு துவங்கி, 12:45க்கு முடியும். 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம்பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி