தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து
தருமபுரிமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நவ.30) விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி