அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கான ஜனவரி2014 -க்கான அகவிலைப்படி உயர்வு10முதல்12சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செப்டம்பர்2013மாதத்தில் மத்திய
தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN)அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில்1புள்ளி அதிகரித்துள்ளது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த3மாதத்தில் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி10%முதல்12%ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி2014முதல் உயர்த்தக்கூடும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு10%க்கு குறைய வாய்ப்பில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.ஆகையால் ஜனவரி2014ல் குறைந்தபட்சம் அகவிலைப்படி100%ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அக்டோபர்2013மாதத்திற்கான (AICPIN)குறியீடு நவம்பர்29ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
dear friend full time PVI ku incentive unda? please give any G.O.
ReplyDelete